முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி! Breaking Today Tamilnadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி! 

ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகன் இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.

ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் விஜய் அவர்கள்.

Comments

Popular posts from this blog

Anna University Job Requirement 2025 || Latest Update In Chennai || Goverment Jobs Update In Tamilnadu

டிவிகே தலைவர் விஜய் மகளிர் சிறப்பு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் 👏 தரமான அறிக்கை

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி || Tn Government best scheme