Tamilnadu Police Job Requirements 2025 - 26 || Constable Notification Release || 3 Type Posting || Qualification 10th || Need Documents & Last Date Full Details
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்,
இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு - 2025.
1. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2025 க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை வரவேற்கிறது. (Online Application)
அறிவிக்கை தேதி : 21.08.2025
விண்ணப்பம் துவங்கும் தேதி : 22.08.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.09.2025
விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான கடைசி தேதி : 25.09.2025
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 09.11.2025
*காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை : 3,644 + 21"
காவல்துறை
இரண்டாம் நிலைக் காவலர் மொத்தம் : 2833
சிறை மற்றும் சீர்திருத்தத் துறை
இரண்டாம் நிலை சிறைக் காவலர் : ஆண்கள் 142 , பெண்கள் 38 . மொத்தம் = 180
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
தீயணைப்பாளர் : ஆண்கள் 631
தேர்வு முறைகள்:
தமிழ்மொழி தகுதித் தேர்வு : 80 மதிப்பெண், மற்றும் இத்தேர்வு தகுதித் தேர்வே ஆகும்.
முதன்மை எழுத்துத் தேர்வு : 70 மதிப்பெண், முதன்மை எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
உடற்திறன் போட்டிகள் : 24 மதிப்பெண், உடற்திறன் போட்டிகளில் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு பெற வேண்டும்
சிறப்பு மதிப்பெண்கள் : 6 மதிப்பெண், தேசிய மாணவர் படை சான்றிதழ் (NCC) 2 மதிப்பெண்கள் நாட்டு நலப்பணித் திட்ட சான்றிதழ் (NSS) - 2 மதிப்பெண்கள் (Sports / Games) 2 மதிப்பெண்கள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் மதிப்பெண் வழங்கும் விவரம் வரிசை எண்.20-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நிலைகள்:
பகுதி -1. தமிழ் மொழி தகுதித் தேர்வு:
*இத்தேர்வானது 80 மதிப்பெண்களுக்கான 80 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான கால அளவு 80 நிமிடங்கள். (1 மணி 20 நிமிடங்கள்).
*ஒரு வினாவிற்கு தலா 1 மதிப்பெண் வழங்கப்படும்
*தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) பெற்று தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
பகுதி -II. முதன்மை எழுத்துத் தேர்வு:
பகுதி-அ பொது அறிவு - 45 மதிப்பெண்கள் 45 கேள்விகளை கொண்டது.
பகுதி-ஆ: உளவியல்
25 மதிப்பெண்கள் 25 கேள்விகளை கொண்டது
*இத்தேர்வானது 70 மதிப்பெண்களுக்கான 70 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான கால அளவு நேரம் 80 நிமிடங்கள் (1 மணி 20 நிமிடங்கள்:.
*ஒவ்வொரு வினாவிற்கும் தலா 1 மதிப்பெண் வழங்கப்படும்.
*விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற்றிருக்க வேண்டும்.
Required Documents:
1.Photo, Signature
2.10TH, 12th, UG Marksheets
3. Community Certificate
4.PSTM Certificate (if applicable)
5.Sports Certificates, NCC, NSS (if applicable)
Age limit: 18 to 26 (OC), 18 to 28 (BC, MBC/DNC) 18 to 31(SC/ST)
3 Posting
[ இரண்டாம் நிலைக் காவலர். இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2025. ]
Thank For Watching
Comments
Post a Comment